தமிழர்களை இணையத்தில் ஒன்றாக்க முடியுமா? இந்த கேள்வியைத்தான் இன்று பலர் கேட்கின்றார்கள். இதற்கானபதிலும் ஒரு கேள்விக்குறிதான். அதற்கு சில காரணங்கள் உண்டு. 1) குறிப்பாக தழிழர்களுக்கு கணனி மீதும் இணையததின்; மீதும் போதியஅறிவின்மை. (எல்லோரையும் கூறவில்லை…. சிலர் ஏன் இன்று பலர் இதற்கு விதிவிலக்கு.) அதுமட்டுமல்லாது அவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமின்மை. நாளை நான் வாழ இந்த கணனி அறிவா வழிகோழப்போகின்றது என்ற தன்மை. அதிலும் குறிப்பாக பெண்கள் இணையத்தை அனுக காட்டும் பயந்த தன்மை வியப்புக்குரியது. இணையத்திலிருந்து வைரஸ் ஒருவேளை கணனிக்கு வருமேதவிர பெண்களின் வயிற்றுக்குள் வராதுதானே. பிறகு ஏன் இந்த பயம். இதற்கு என்ன காரணம் ? காரணமுண்டு. இவர்களின் மூடநம்பிக்கை."நான் இணையத்திலோ,கணனியிலோ இருந்தால் என்னை இந்த தழிழ் சமுதாயம் குறிப்பாக வயதுவந்தவர்கள் என்ன கூறுவார்கள் என்ற அச்சம். (இது குடும்பப்பெண்கள் கொள்ளும் அச்சம்.) கல்விக்கு முதலிடம் கொடுக்கும் நம் தமிழ் சமுதாயத்தில் கணனிக்கல்விக்கும் அதன் வழி இணைய அறிவிக்கும் இன்னும் கூடிய நேரம் ஒதுக்கினால் என்ன. இன்று ஆண்கள் கூறுகின்ற வார்த்தை இதுதான். "நான் வேலைக்குப்போயிட்டுவந்தனான் இனி என்னால் ஒன்றும் செய்யமுடியாது". ஏன் வேலையை ஒரு பழுவாகநினைக்கிறீர்கள். வேலையை வாழ்க்கையின் ஒரு பாகமாக நினைத்து மீதமுள்ள நேரத்தில் கணனியறிவைப்பெறலாமே. நாளை இந்த இணைய உலகத்தில் தமிழ் மூலம் அனைத்து தவல்களையும் (ஆங்கிலத்திற்கு நிகராக) பெற உங்களின் அறிவும் உதவலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். இணையத்தை அனுகுங்கள்.கெட்டதை தவிர்த்து நல்லதை பற்றி தங்களின் அறிவைவளர்த்துக்கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் கணனியறிவு மற்றும் இணைய அறிவு பெறவேண்டும் என்ற மனப்பாங்கை உங்களுக்குள் கொண்டுவந்து தங்களுக்கு தெரிந்தவிடயங்களையாவது சொல்லிக்கொடுங்கள். (இவற்றுடன் மொழிசார்ந்த ஏதேனும் மின்னஞ்சல் தழிழ்விவாதக்குழுக்களிலும் அவர்களை உறுப்பினராக்குங்கள்.) இம்முயற்சிக்கு தங்களின் தாத்தா,பாட்டி கூட விதிவிலக்காக இருக்கக்கூடாது.
-தர்சன்-
பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்
-
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில்
ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது,
அதிக நீர...
9 months ago
2 மறுமொழி:
neenkal solvathu mikavum sari.
natpudan
chandravathanaa
hey dude first correct ur blog title.
//தழிழ் கவிதை //
Post a Comment