மனதளவில் மரணித்தாள்

2004/10/10

சின்னப்பெண்னவள் படிக்கப்பணமின்றி
பயணித்தாள் பணிப்பெண்னாய்
வேற்றுநாட்டிலே வேற்றுமொழிமக்களுடன்
பட்டகஸ்டம் கொஞ்சமில்லை – எனினும்
தன் உயிர்கொடுத்து வேலைசெய்தாள்
தன் ஊரிலுள்ள உயிர்களுக்காய்தன்
அன்னை கடன் தானடைத்தாள்தன்
தம்பிகளை கரைசேர்த்தாள்
சொந்த வீடு வாங்கிப் போட்டாள்
சொத்துக்களை குவித்துவிட்டாள்
மீண்டும் ஊர்திரும்பி தன்னன்னைமடி
தானுரங்கி அவள் பட்ட கஸ்டம்
நினைக்கையிலே மனக்கண்
அப்பாலியலுறவும் வந்துநிற்க
மனதளவில் மரணித்தாள்
மதிக்கத்தக்க பாவையவள்.

தர்சன்

1 மறுமொழி:

Gopu said... [Reply]

இந்த கவிதையை இன்றுதான் பார்த்தேன் தர்சன். நன்றாக இருக்கிறது.

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users