அக்கறை

2004/10/27

பூக்கப்போகிறாயா ரோசாப்பூவே?
பார்த்து… பார்த்து…செடியில் முள்ளு.

-ரஜீபன்-
READ MORE - அக்கறை

இட்டிலிக்காரி

2004/10/23

ஊற்றிய மா பொங்கிவர
உளம் குளிர்ந்தாள் உழைப்பாளி…..
-தர்சன்-
READ MORE - இட்டிலிக்காரி

தேடல்

2004/10/21

இவ் உலகமனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வென்றைப்பற்றித்தேடல்
அரசியல்வாதிக்கு எதிர்கால தலைமுறை பற்றித்தேடல்.
வைத்தியனுக்கு அதிக உழைப்பை பற்றித்தேடல்.
நடிகனுக்கு தனது பிரபல்யம் பற்றித்தேடல்.
ஆனால் எனக்கோ இவ் உலகில் மனிதநேயம் பற்றித்தேடல்.
கர்ப்பிணிகளுக்கு பஸ்சில் அமர இடங்கொடுக்காத இளையர்களிடம்.
பாடசாலைக்கல்வியைவிட தனியார் கல்விநிலையங்களில் அக்கறைகாட்டும் ஆசிரியரிடம்.
தனது ஆயுதபலத்தால் உலகநாடுகளை அச்சுறுத்தும் வல்லரசுநாடுகளிடம்
சிறுவர்களை தமது காம இச்சைக்கு பயன்படுத்தும் தமுகனிடம் மனித நேயத்தை தேடுகிறேன்
தேடி தேடி விடைகாணாததால் இவ்வுலகத்தை படைத்த ஆண்டவனைத்தேடுகிறேன்.


-இனிதன்-

READ MORE - தேடல்

மீன்முள்

2004/10/20

உயிரோடு கொண்ற பாவத்திற்க்கு

பழி தீர்த்தது தொண்டையில் முள்.

-Rajeepan-

READ MORE - மீன்முள்

பெண்ணுரிமை

2004/10/17

பெண்களுக்காக உயிரைத்தரச்சித்தமாகஇருக்கும் ஆண்கள்.
ஏனோ அவர்களின்உரிமையை தரமட்டும் சம்மதிப்பதில்லை.
-Rajeepan-
READ MORE - பெண்ணுரிமை

முடியுமா?

2004/10/13

தமிழர்களை இணையத்தில் ஒன்றாக்க முடியுமா? இந்த கேள்வியைத்தான் இன்று பலர் கேட்கின்றார்கள். இதற்கானபதிலும் ஒரு கேள்விக்குறிதான். அதற்கு சில காரணங்கள் உண்டு. 1) குறிப்பாக தழிழர்களுக்கு கணனி மீதும் இணையததின்; மீதும் போதியஅறிவின்மை. (எல்லோரையும் கூறவில்லை…. சிலர் ஏன் இன்று பலர் இதற்கு விதிவிலக்கு.) அதுமட்டுமல்லாது அவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமின்மை. நாளை நான் வாழ இந்த கணனி அறிவா வழிகோழப்போகின்றது என்ற தன்மை. அதிலும் குறிப்பாக பெண்கள் இணையத்தை அனுக காட்டும் பயந்த தன்மை வியப்புக்குரியது. இணையத்திலிருந்து வைரஸ் ஒருவேளை கணனிக்கு வருமேதவிர பெண்களின் வயிற்றுக்குள் வராதுதானே. பிறகு ஏன் இந்த பயம். இதற்கு என்ன காரணம் ? காரணமுண்டு. இவர்களின் மூடநம்பிக்கை."நான் இணையத்திலோ,கணனியிலோ இருந்தால் என்னை இந்த தழிழ் சமுதாயம் குறிப்பாக வயதுவந்தவர்கள் என்ன கூறுவார்கள் என்ற அச்சம். (இது குடும்பப்பெண்கள் கொள்ளும் அச்சம்.) கல்விக்கு முதலிடம் கொடுக்கும் நம் தமிழ் சமுதாயத்தில் கணனிக்கல்விக்கும் அதன் வழி இணைய அறிவிக்கும் இன்னும் கூடிய நேரம் ஒதுக்கினால் என்ன. இன்று ஆண்கள் கூறுகின்ற வார்த்தை இதுதான். "நான் வேலைக்குப்போயிட்டுவந்தனான் இனி என்னால் ஒன்றும் செய்யமுடியாது". ஏன் வேலையை ஒரு பழுவாகநினைக்கிறீர்கள். வேலையை வாழ்க்கையின் ஒரு பாகமாக நினைத்து மீதமுள்ள நேரத்தில் கணனியறிவைப்பெறலாமே. நாளை இந்த இணைய உலகத்தில் தமிழ் மூலம் அனைத்து தவல்களையும் (ஆங்கிலத்திற்கு நிகராக) பெற உங்களின் அறிவும் உதவலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான். இணையத்தை அனுகுங்கள்.கெட்டதை தவிர்த்து நல்லதை பற்றி தங்களின் அறிவைவளர்த்துக்கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும் கணனியறிவு மற்றும் இணைய அறிவு பெறவேண்டும் என்ற மனப்பாங்கை உங்களுக்குள் கொண்டுவந்து தங்களுக்கு தெரிந்தவிடயங்களையாவது சொல்லிக்கொடுங்கள். (இவற்றுடன் மொழிசார்ந்த ஏதேனும் மின்னஞ்சல் தழிழ்விவாதக்குழுக்களிலும் அவர்களை உறுப்பினராக்குங்கள்.) இம்முயற்சிக்கு தங்களின் தாத்தா,பாட்டி கூட விதிவிலக்காக இருக்கக்கூடாது.
-தர்சன்-

READ MORE - முடியுமா?

உன்னைக்கண்டபோது

2004/10/12

உலகத்தை தேடினேன் கண்டுபிடிக்கமுடியவில்லை
உன்னைக்கண்டபோது நீ என் உலகம் என புரிந்துகொண்டேன்.
-பிரதாப்-
READ MORE - உன்னைக்கண்டபோது

சாரதி

2004/10/10

பயணிகள் தூங்கினால் சொகுசுபயணம்நான் தூங்கினால் அவர்கற்க்கு இறுதிப்பயணம்.
-ரஜீபன்-

READ MORE - சாரதி

மனதளவில் மரணித்தாள்

சின்னப்பெண்னவள் படிக்கப்பணமின்றி
பயணித்தாள் பணிப்பெண்னாய்
வேற்றுநாட்டிலே வேற்றுமொழிமக்களுடன்
பட்டகஸ்டம் கொஞ்சமில்லை – எனினும்
தன் உயிர்கொடுத்து வேலைசெய்தாள்
தன் ஊரிலுள்ள உயிர்களுக்காய்தன்
அன்னை கடன் தானடைத்தாள்தன்
தம்பிகளை கரைசேர்த்தாள்
சொந்த வீடு வாங்கிப் போட்டாள்
சொத்துக்களை குவித்துவிட்டாள்
மீண்டும் ஊர்திரும்பி தன்னன்னைமடி
தானுரங்கி அவள் பட்ட கஸ்டம்
நினைக்கையிலே மனக்கண்
அப்பாலியலுறவும் வந்துநிற்க
மனதளவில் மரணித்தாள்
மதிக்கத்தக்க பாவையவள்.

தர்சன்
READ MORE - மனதளவில் மரணித்தாள்

கவிதை

2004/10/06

காதல் கொண்டநாய்கூட கவிதை பாடி
ஊளையிட வல்லது.
நானும் கவிதைபாடுகின்றேன் ஏனெனில்
நான் நன்றியுள்ளவன்…

-Rajeepan-
READ MORE - கவிதை

அன்பே எழுது

2004/10/05

அன்பே எழுது எழுது
எனக்கு ஒர் கடிதம் எழுது
என்னை விரும்புகிறாய் என்றில்லை
வேறோருவரையும் விரும்பவில்லை என்று....
-பிரதாப்-
READ MORE - அன்பே எழுது

நினைவுகள்01

2004/09/28

காவிக்கும் சாமிக்கும் சம்மந்தம் உண்டோ ?பாரினில்
காவி உடுத்தவன் சாமியார்உண்மையான "சாமி"யார் ?

READ MORE - நினைவுகள்01

யதார்த்தம்

நான் விஞ்ஞானியாகலாம் அது யதார்த்தம்

நாளை நம் தேசத்தில் சமாதானம் நிலவலாம் அது யதார்த்தம்

உலகப்போதுமொழி தமிழாகலாம் அதுவும் யதார்த்தம் - ஆனால்

சிறகொடிந்த பறவையின் சிறகுகள் நாளை முளைக்குமோ ?

-தர்சன்-

READ MORE - யதார்த்தம்

நான் உன்னிடம் கேட்பதேல்லாம்...

2004/09/27

நான் உன்னிடம் கேட்பதேல்லாம் உன் இதயத்தில் ஓர் இடம்தான்.
உன் வாழ்க்கையில் நான் ஒரு பாதி என்று சொல்லவில்லை.
உன் வாழ்க்கையில்பாதியை உனக்குப்பிடித்தவனுக்குக்கொடுத்துவிடு.
உன் இதயத்தில் ஒரு சின்ன இடம் அதை எனக்குக்கொடு.
அச்சின்ன இடம் என் வாழ்க்கையில் பெரிய சந்தோசம்.
-பிரதாப்-
READ MORE - நான் உன்னிடம் கேட்பதேல்லாம்...

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users