உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..
நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..
கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமெரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி
மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.
-சுதேசன்-
சொற்பதங்கள்
ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,
ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.
கிபிர் - ஒரு வகை போர் விமானம்
கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.
தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்
தந்தை என பொருள் படும்.
ஒரு ரவுடியின் குடும்பம்
-
எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு
எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க
கட்டளையிட்டிருந்தார் வூ...
5 years ago
9 மறுமொழி:
kadasi vari enna pogumpothu thane??? kavithai nallathan iruku :-)
ஏதோ போகும்போதுதான் நல்லாயிருக்கிறதாம்.(உண்மையை சொல்லிறார்.)
அடடடா எப்படித்தான் இப்படி எல்லாம் கவிதை எழுதிறிங்களோ!
அதுதானே லோகா காதல் கவிதையில இது ஒரு போரா இருக்கு. :-(( விளக்கத்தை சுதேசன்தான் சொல்லனும். எண்டாலும் பயப்பிடாம உண்மைகள் நிறைய சொல்லியிருக்கிறார்.:-))
தர்சா கவிதை சுப்பர்.
வித்தியாசமான சிந்தனை தர்சன். சுதேசன் நன்றாக எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்.
மிதுஸ் கவிதை எழுதியது நானில்லை. சுதேசன்
உண்மைதான் கோபு அண்ணா! இயற்கையை அனுபவித்தவனுக்கு அவள் காதலியை இயற்கையோடு ஒன்றி கவி வடிக்க முடியும். போர் சூழலில் வளர்ந்த ஒருவன் காதல் கொண்டால் ஒருவேளை அவன் இப்படித்தான் கவிவடிப்பான் போலும் நானும் ரசித்தேன். :-))
******//உன் தேப்பன் // - உன்ர கொப்பர் எண்டு எழுதி இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்லையா தர்சன்
//ஜெஜசுக்குறு // அல்ல- ஜெயசிக்குறு
அடடடா எப்படித்தான் இப்படி எல்லாம் கவிதை எழுதிறிங்களோ!!!!!!!!! *******
நீங்கள் சொல்வது போல் எழுதியிருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் கவிதையில் மாற்றம் செய்ய நான் யார் ? கவிதை எழுதியது சுதேசன்தானே. அது என்னவே ஜெயசிக்குறுதான் சரிபோல் தெரிகிறது. சுதேசனும் இலங்கையிலிருந்துதான் எழுதுகிறார். ஒருவேளை அவர் அந்த படை நடவடிக்கையின் போது ஓடவில்லை போலும். :-)) அதனால் மறந்திருப்பார். அவரை மன்னிக்கவும் கலாநிதி.. கலா"நீதி".... :-))
Post a Comment