கொஞ்ச நாளாய் ஜயா ரொம்ப பிசி(Busy). :-))அதுதான் தமிழ்கவிதையில என்னால ஒன்றுமே எழுத முடியவில்லை. என்றாலும் என் நன்பர்களினதும் உறவினர்களினதும் கவிதைகளை தூக்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆக்கத்தை வாசித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி நாளைக்கு ஞாயிறு ஆயிற்றே நிறைய பேர் ஒன்லைனில(Online) :-)) சும்மா வெட்டியா அலைந்து கொண்டிருப்பாங்கள். அதில ஒருசிலராது இங்க வருவாங்கள் இல்லையா அவங்கள் படிக்க லோகா எழுதின இந்த கவிதையை இங்க போடலாம் என்று தீர்மானித்து இந்தப்பதிவு. சரி விடயத்துக்கு வருவம்.
பாழாய்ப்போன கட்டெறும்பு
மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!
-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-
-லோகா -
ஒரு ரவுடியின் குடும்பம்
-
எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு
எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க
கட்டளையிட்டிருந்தார் வூ...
5 years ago
24 மறுமொழி:
he he kavithai nalla irukirathu.
mm.... Loka than intha kavithaiyai eluthiyavar. mithush
பாழாய்ப்போன கட்டெறும்பு
:-):-) koncham tooo much
no comments
ஓம் பாழாய் போன கட்டெறும்பு... :-)) நன்றி தங்களின் வருகைக்குசந்திரவதனா அக்கா.
இப்படி நிறைய பேரை கண்டிருக்கிறேன். தன் நாட்டில் நடக்கும் விடயத்தை விட.. தன் வீட்டில் நடக்கும் விடையத்தைவிட.. தான் விரும்பும் நடிகனுக்கோ அல்லது நடிகைக்கோ ஏதாவது நடத்துவிட்டால் ஏங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதைப்போல் ஒருவராக்கும் இவர். இதில் என்ன ஜொக் என்றால் இக்கவிதை யாழ்பாணத்தில் புகழ் பெற்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. :-)) [அடடா லோகா அடிக்க வரப்போறார்]
//:-):-) koncham tooo much
no comments//
இது என்ன வம்பாய் போய்விட்டது. கவிதை எழுதியது நானில்லை.கவிதையில் சொற்சுவை பொருட்சுவைகளில் தவறிருப்பின் அதற்கு பதில் அழிக்க வேண்டியவர் லோகாவே :-)) [அப்பா நான் தப்பியாச்சு]
யார் அந்த லோகா?..
அவரை அறியத்தரமாட்டீர்களா தம்பி?
:-p
நேசமுடன்..
-நித்தியா
என்ன அக்கா இப்படி ஒரு கேள்வி! அவரின் வலைப்பூ முகவரி இதோ:- http://loka124.blogspot.com/
என்ன ஏற்கனவே உங்களுடைய ஒரு மறுமொழி அவரின் வலைப்பூவில் உள்ள "ஈர்ப்பு விசைகள்" பதிவில் இருக்கிறது போல்...:-))
ம்... பிறகு தெரியாத மாதிரி கேள்வியா?
oh..opps :-)
சரி சரி மறந்துட்டேன்
:-)
பார்க்கிறேன்
நேசமுடன்..
-நித்தியா
அது.... :-))
தர்சன் இந்த கவிதையை நான் முதலிலேயே எங்கையோ வாசித்திருக்கிறேன். கவிதை நன்றாக இருக்கிறது.
ஒருவேளை 2001இல் இலங்கையில் சுடர்ஒளி பத்திரிகையில் வந்த நேரம் வாசித்திருப்பீர்களோ? :-))
கட்டெறும்பும் ரசிகரோ என்னவோ அது முத்தமிடுவதாய் நினைத்திருக்கலாம் :-)).
வணக்கம்!
நண்பனின் தளத்தில் என் கவிதை அரங்கேற்றம் நடந்து விமர்சனப்பட்டியல் நீண்டு வளர்ந்திருப்பது எனக்கு மகிழ்சியாக உள்ளது. விமர்சனங்கள் என்றும் வளர்ச்சியடையச் செய்பவை.நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.
நித்தியாவின் சர்ச்சை ஆனந்தமளிக்கிறது!
சேகரின் பதிவில் - இது எனது சொந்தக்கவிதை.எனது லோகா இணையத்தளத்தில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த ஆக்கங்களே. பெரும்பான்மையானவை புனைபெயர்களில் பத்திரிகைகளில் பிரசுரமானவை. தர்சன் சொன்னதுபோல் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். நன்றி!
முத்து நினைத்ததும் நன்றாய் உள்ளது. அந்த நினைப்பு எனக்கு வரவேயில்லையே!
-லோகா -
வணக்கம்!
நணபனின் தளத்திலே எனது கவிதை அரங்கேற்றம் நடந்து விமர்சனப்பட்டியல் விரிந்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி தங்களது விமர்சனங்களுக்கு! விமர்சனங்களே வளர்ச்சிக்கு உதவும்.
இனி..
நித்தியாவின் சர்ச்சை -
சந்தோசமாகவுள்ளது!
சேகரின் ஞாபகம் - எனது இணையத்தளத்தில் உள்ள அனைத்துக் ஆக்கங்களும் எனது சொந்தஆக்கங்களே!பெரும்பான்மையானவை எனது புனைபெயர்களிலும் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. தர்சன் கூறியதுபோல் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். நன்றி!
முத்துவின் மூளைக்கு - நல்ல நினைப்புத்தான். எனக்குள் அந்த நினைப்பு பக்கம் நினைக்கமால் போய்விட்டதே!
- லோகா -
நல்ல கவிதை.
அதுசரி, உந்தப் பட்டியல் படம் online இல விடுறதுக்கு எவ்வளவு காசு கட்டி அனுமதி வேண்டியிருக்கிறியள்? நானும் இப்படியொரு திட்டம் வச்சிருக்கிறன். தயாரிப்பாளர் அல்லது வினியோகத்தர்களிட்ட எனக்குத் தொடர்பில்ல. அதோட உரிமம் பெற எவ்வளவு காசு எண்டும் தெரியேல. நீஙகள் உதவி செய்ய முடியுமா?
அடடா :-)) என்ன ஏதோ வம்பு கேள்விபோல் இருக்கிறது. நான் Link மட்டுமே கொடுத்திருக்கிறேன் நன்பரே. நீங்கள் இந்த கேள்வியை www.happytamil.com உரிமையாளரிடம் கேட்கலாம்.
நன்றி வணக்கம்.
பாழாய்ப்போன கட்டெறும்பு இப்படியுமா கவிதை என்ற பெயரிலே கடித்துத் தொலைக்கும்?
Good One!!
You site looks good. I am visiting for the first time.I am impressed.
My child likes this song. So she got excited and came & saw the song.
ஏன் தர்சன் ரொம்ப பிசியோ??? உம்முடைய கதைகள் ஒன்றையும் காணவில்லை. இந்த கவிதை நல்லா இருக்கிறது.
கதிர் நான் தற்போதுதான் கொஞ்சம் இளைபாருகிறேன். என்னுடைய அலம்பல்களும் அப்பப்போ வரும் கவலை வேண்டாம். :P
அட பாவி! யார் இந்த கவிதையை எழுதியது? பெரிய ஆள்தான். ம்... நல்லாயிருக்கு.
விசனப்படக் கூடிய விஷயம்தான்!
:(
ஆம் நிச்சயமாக. நன்றி வருகைக்கும் தருகைக்கும்.
Post a Comment