கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்"
கனியமுதே!" என்றேன்"
என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!
- லோகா -
"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)
{லோகா தானும் ஒரு வலைப்பூவை உருவாக்கியுள்ளார். அவரின் வலைப்பூவை பார்வையிட இங்கே சுட்டவும்.}
ஒரு ரவுடியின் குடும்பம்
-
எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு
எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க
கட்டளையிட்டிருந்தார் வூ...
5 years ago
11 மறுமொழி:
ஊசிஇலை என்று ஒர் பத்ரிகை வருகிறதா என்ன?
ஏன் தெரிஞ்சு என்ன செய்யப்போகிறீர்கள்.
அடடடா சுவிஸ்லாந்திலே "ஊசிஇலை" என்ற பத்திரிகை வருகிறதுதான்.
நன்றி தர்சன் என் பதிவை பதிந்தமைக்கு.
ஓம் ஓம். :-))
நல்ல கவிதை. ரசிக்கும் படி உள்ளது.
நன்றி Senthu மற்றும் கைப்புள்ள. உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் லோகாவைச்சேரும்.
azhakiya kavithai
நன்றி சந்திரவதனா அக்கா.
நன்றி கைப்புள்ளை தங்களின் வருகைக்கும்... கருத்திற்கும்.
கவிதை நல்லா இருக்கு... சுப்பர்...
Post a Comment