புலம்பெயர் நாடுகளில் நம் தமிழர்களிடம் என்ன இருக்கோ இல்லையோ கடன் நிச்சயமாக இருக்கும். இதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்றால் தலையே வெடித்துவிடும். காசு நிறைய இருந்தாலும் நான்குபேரிடம் கடன் வாங்கிவைத்துக்கொள்வான். காரணம் தன்னை மற்றவர்கள் பணக்காரன் என்று கூறிவிடக்கூடாது என்பதற்காக. வாங்கிய ரீசேட் நாளைக்கே கிழிந்துவிடுகிறேன்பார் என்ற நிலையில் இருக்க அதோடே வேலைக்குப்போய் வருவான் ஒருவன். எங்களிடம் பணம் இல்லை என்று மற்றவர்களை ஏமாற்றவே இந்த நடிப்பு. அரசின் எல்லாவிதமான இலவச சலுகைகளையும் நுகரும் இவர்களின் பணவைப்பகம் அவர்களின் கட்டில்களுக்கே வெளிச்சம். :-) பல தமிழர்களை ஏமாற்றினாலும் தம் வேண்டப்பட்டவர்கள் மூலம் இவர்கள் தமிழர்களுக்கு ஆற்றிவரும் சேவை மிகப்பெரியது. அது வேறு ஒன்றுமில்லை வட்டிக்கு காசு கொடுப்பதுதான்.
இவர்கள் ஒருபுறமிருக்க மற்றவர்கள்........
இவர்கள்போட்டால் "நைக்" மார்க் சப்பாத்துகளைத்தான் போடுவார்கள். மற்றவர்களுடன் கதைக்கும்போது தனக்கு "வருமை" என்றசொல்லே தமிழில் இருப்பது தெரியாததுபோல கூறிக்கொள்வார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் இலட்சக்கணக்கில் கடன் இருக்கும். அவர்கள் வாழ்க்கைமுழுவதும் உழைத்தாலும் அக்கடனை அவர்களால் அடைக்கமுடியாது. இது அவர்களின் நிலை. ஆனால் வீட்டில் ஒரு விசேடம் என்று வந்தால் அவர்களைக்கேட்டுத்தான் ஆடம்பர செலவுக்கு. இல்லை இல்லை அவர்களைப்பொருத்தவரை அத்தியாவசியம். இப்படியிருக்கின்றது இவர்கள் வாழ்க்கை. புலம்பெயர் நாடுகளில் திட்டமிட்டு வாழத்தெரிந்தவர்கள் வெகுசிலரே. நான் இவர்களை குற்றம் சாட்டவிரும்பவில்லை. ஆனால் ஒன்றைமாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும், வெள்ளையர்களைப்போல் நாங்கள் இந்த நாடுகளில் வாழ்வது மிகக்கடினம்.(வாழமுடியாது என்று இல்லை) அவர்களின் உழைப்புக்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தான கலாச்சார பின்னனி அவர்களது. ஆனால் எமது அப்படியானது அல்ல. அதற்காக நான் முதலில் சொன்னதுபோல தன்னை ஏழையாக மற்றவர்களிடம் காட்டி பணம்சேர்பது விரும்பப்படக்கூடிய செயல் அல்ல. திட்டமிட்டு வாழ்ந்தால் அவ்வாழ்க்கை உத்தமம்.
பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்
-
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில்
ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது,
அதிக நீர...
9 months ago
5 மறுமொழி:
\\புலம்பெயர் நாடுகளில் நம் தமிர்களிடம் என்ன இருக்கோ இல்லையோ? கடன் நிச்சயமாக இருக்கும்.\\ennata ila Tharshan..
niraya elluthu pillai iruku thirumba pathivai vasichu parunga
நன்றி சினேகிதி! இதுதான் எதை படித்தாலும் ஒழுங்காபடிக்கனும் என்கிறது.:-((
உண்மை தான் இப்படி நானும் கண்டிருக்கிறேன். ஏன் தான் பிறரை எண்ணி வருந்து நடிப்பில் வாழ்க்கையை தமிழர்களாகிய நாங்கள் ஓட்டுகிறோமோ:(
உண்மை தான் இப்படி நானும் கண்டிருக்கிறேன்
நன்றி கயல்விழி மற்றும் சந்திராவதனா அக்காவுக்கு
Post a Comment