பேய் பொழுதுபோக்கு

2005/07/24

எல்லோருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அவை சில வித்தியாசமான அனுபவத்தை தரும். என் தங்கையின் கணனியை திறந்தால் அங்கே பழைய நடிகர் நடிகைகள் முதல் தற்கால நடிகர் நடிகைகள் வரை மட்டுமல்லாமல் நான் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரும் Microsoft paint மூலம் வடிவடைக்கப்பட்ட பேய்களாகவே இருக்கிறோம். நம்மள சும்மா பார்த்தாலே பேய் மாதிரி இருக்கும் என்பதால் இங்கே வேறு ஒரு போட்டோ காட்சிக்காக....

{ எங்களின் வீட்டில் உள்ள எல்லா தனிப்போட்டோக்களும் மாற்றிமுடிந்ததால். தங்களுடைய போட்டோக்களையும் வேண்டிநிற்கிறார் என் அருமைத்தங்கை :-)) }

22 மறுமொழி:

சூப்பர். இன்னும் கொஞ்சம் இந்தமாதிரி படங்களை காமிங்க.

என்ன ரமணி உங்களுக்கும் இதுதான் வேலையா? நானே என் தங்கையின் உபத்திரவம்தாங்காமல் போட்டதுதான் அது. வேறு நிறைய உண்டு அதை போட்டால் ரசிகர்கள் சண்டைக்கு வந்திடுவாங்களே. :-)

கணினி கைக்குள் அகப்பட முன்னர் கையில் கிடைக்கம் படங்களுக்கெல்லாம்
நானும் இப்படிச் செய்திருக்கிறேன். வீட்டில், பேனையும் பேப்பரும் என் கைக்கு எட்ட வைக்கக் கூடாது என திட்டியுள்ளார்கள். இப்போதும் கூட யாராவது தொலைபேசியில் அலட்டினால் என் கை சும்மா இருக்காது இப்படி ஏதாவது செய்து கொண்டிருக்கும். ரெகுலா பல் நான் வைப்பதில்லை. வேறோதாவது விதமாக அழகு படுத்துவேன்.

கணினிக்குள் வேறு பல விடயங்கள் இருப்பதால் கணினியில் இதனோடு மினைக்கெடுவதில்லை.

கலக்கிப்போட்டீங்க.
உங்க லிஸ்ட்ல திரிசா,சோதிகா எல்லாம் இல்லையா???

Tharshan harini i potu intha paadu paduthirukka unga thangai

என்ன சந்திரவதனா அக்கா நீங்களுமா?ஒரு நாள் சின்னவயதில் எங்களுடைய மாமியின் போட்டோவுக்கு அழகான பாரதியார் மீசை வைத்துவிட்டு நான் தூங்கிவிட்டேன்.அதை வேலையால் வந்துபார்த்த மாமா அதிகாலையில் என்னையை கூப்பிட்டு நக்கலாக உண்மையை பயப்பிடாமல் கீறியிருக்கிறாய் என்றார். ஆனால் மாமி அதை இன்றும் சொல்லி என்னை அன்பாக திட்டுவார். :-))

எனினும் நான் புகைப்படத்தின் உருவத்தை வேறாகமாற்றுவேனே தவிர இப்படியில்லை.(பேய்களாக மாற்றுவதில்லை) :-(

அன்று இந்த படங்களை என் தங்கையின் கணனியில் கண்டவுடன் எனக்கு சிறியவயதில் நான் செய்த குறும்புகள் ஞாபகத்தில் வந்ததால் இதை இங்கே போட்டேன்.

ஆச்சரியம்! சுதர்சன் கோபால் மற்றும் ரமணி போன்றவர்கள் இது நன்றாக இருக்கிறது என்கிறார்கள் :-)) :-((

ஹாரினியை மட்டுமல்ல திரிசா,ஜேதிகா மற்றும் அண்மையில் வந்த நயன்தாராகூட பேயாகத்தான் என் தங்கையின் கணனியில் இருக்கின்றனர் சினேகிதி. நான் என்ன செய்ய...

விசித்திரமான விளையாட்டு தான். என்ன நடிகைகளை நேரில பாத்தால் (அலங்காரம் மேக்கப்) இல்லாமல் பாத்தா இதை விட பயமாய் இருக்கும் என்றார்களே உண்மையா. தர்சன் தங்கைக்கு வேறு ஏதாவது பொழுது போக்கக்கூடிய விடயத்தை அறிமுகப்படுத்தக்கூடாதா?

ஓம் அறிமுகப்படுத்தலாமே! ஆனால் அதை என் தங்கை கேட்கனுமே..:-))

//ஓம் அறிமுகப்படுத்தலாமே! ஆனால் அதை என் தங்கை கேட்கனுமே..:-)) //

ஆதிக்கமாய் செய் என்று சொல்லாமல் இது எப்படி என்று அறிமுகப்படுத்துங்கள் கேட்பார்.

ஹா ஹா ஹா .. எனக்கும் மிக பிடித்த பொழுதுபோக்கு இது..
கணிணி அல்ல, பேனாவை வைத்து புத்தகங்களில் வரும் படங்களுக்கு பெரிய பல் , மீசை எல்லாம் வரைந்து .. அது ஒரு தனி சுகம்..
அப்படி சமீபத்தில் என்னிடம் மாட்டியவர், எங்கள் வீட்டு காலண்டரில் அழகாக சிரித்துகொண்டிருந்த வசந்த் அண்ட் கோ, வசந்தன் சார் ! :)
வீ எம்

//ஆதிக்கமாய் செய் என்று சொல்லாமல் இது எப்படி என்று அறிமுகப்படுத்துங்கள் கேட்பார்.//

ம்....... பார்ப்போம்.என்ன வீ. எம் நீங்களுமா?:-()

தர்சன் அவர்களே,

ஒரு தனி மின்னஞ்சலில் என் போட்டோவை இணைத்துள்ளேன். மாறுதல் செய்வித்து வலைப்பூவில் போட்டு கொள்ளுங்கள். என் போட்டோ மட்டுமே. அருணா மற்றும் மாலனை விட்டுவிடவும்!
அன்புடன்,
டோண்டு ராகவன்

நன்றி Mr.dondu அவர்களே தங்களுக்கு தனிமடலிலேயே பதில் போட்டிருக்கிறேன்.

நன்றி தர்சன் அவர்களே. என் பதிவில் போய் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said... [Reply]

சூப்பர் சூப்பர் தர்சன்.
நான் இளங்கோ ஞாபகமிருக்குதா

NONO said... [Reply]

எனது புகைப்படத்தை எப்பிடி உங்களுக்கு அனுப்பிவைப்பது என்று உடனே கூறவும்!!!

தங்களின் ஆர்வத்திற்கு நன்றி NONO. எனினும் தங்களின் அழகான புகப்படத்தை ;-) எனக்கு அனுப்பிவைக்கவேண்டாம். நான் சும்மா நக்கலாகத்தான் அங்கே அதை எழுதினேனே தவிர,இத்தனை பேருக்கு இப்படி விபரீதஆசையிருக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கே எழுதியிருக்கமாட்டேன். :-))

ஆம் இளங்கோ உங்களை மறக்கமுடியுமா? :-)) நீங்கள் என்னோடு என் மின்னஞ்சலில் [tharsan29@gmail.com]தொடர்புகொள்ளுங்கள்.

யோவ் தர்சா அந்த நடிகையை பார்க்கவே பயமாயிருக்கிறது.

என்ன மாமா நான் செய்ய.. தங்கை பார்த்த கோலம். :-))

rajeepan said... [Reply]

நடிகைகளுக்கு உங்கட தங்கை இவ்வளவு கஸ்டப்பட்டு பேய்மாதிரி வரைஞ்சிருக்கத்தேவையில்லை..ஏன்னா அவங்கட மேக்கப்பில்லாத முகத்தைபார்த்த இதைவிடப்பயங்கரமா இருக்கும்..

santhanam said... [Reply]

@U.P.Tharsan

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users