ஒரு செய்தி

2005/05/21

அண்மையில் யேர்மனியின் தலைநகராம் Berlin இல் ஒரு நினைவுமையம் திறந்துவைக்கப்பட்டது. 60 வருடங்களுக்கு முன் யேர்மனியின் நாசிப்படைகளால் கொல்லப்பட்ட யூத மக்களின் ஞாபகார்த்தமாக இவ்நினைவுமையம் திறக்கப்பட்டது. இந்த நினைவுமையத்தை திறக்கவே தற்போதைய அரசு எவ்வளவோ பாடுபடவேண்டியிருந்தது என்பது உலகமறிந்த உண்மை. ஒரு வழியாக திறக்கப்பட்ட இந்த நினைவுமையத்தை பார்வையிட வந்த இஸ்ரேலிய அமைச்சர் தனக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை தெரிகிறது.அதாவது யேர்மனியில் குறிப்பாக 24 வயதுக்கு கீழ்ப்பட்ட இளையர்களுக்கு யேர்மன் நாசிப்படைகளால் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதே தெரியாது என்று தகவலை யேர்மன் நாட்டுபத்திகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நம் இருநாட்டின் உறவும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாய் உள்ளதாய் கூறினார். கூறிவிட்டு அவரும்போய்விட்டார்.




இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் யேர்மனியின் பிரபல தொலைக்காட்சியான ARD ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது. அதில் அந்த நினைவுமையத்தில் சிறுபிள்ளைகளும் , கதல்ஜோடிகளும் தங்கள் தங்கள் கைவரிசையைக்காட்டிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் அவ்நினைவுத்தூபிகள் மீது ஏறி அங்கும் இங்கும்மாக பாய்ந்து விளையாடியும், காதல் ஜேடிகள் நினைவுத்தூபிக்கு இடையிலிருந்து தங்களின் காதலை பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அப்போது ARDயின் நிருபர் ஒரு பிள்ளையின் தாயிடம்போய்க்கேட்டார். "ஏன் அதற்குமேல் தங்களின் பிள்ளையை விளையாட விட்டிருக்கிறீர்கள்" என்று. அதற்கு அந்ததாய் கூறியது நானும் என் மகனும் இந்தவழியாகவந்ததாகவும் அப்போத பலபிள்ளைகள் அதில் ஏறிவிளையாடியதைப்பார்த்த தன்மகனும் ஆசைப்பட்டதால் தான் அனுமதித்ததாகவும் வெகு சாதரனமாக கூறினார்.


அதற்கு ARDயின் நிருபர் "இது ஒரு நினைவுத்தூபி" என்றதும். "அப்படியா! நான் இப்ப என்ன செய்யவேண்டும்" என அப்பாவிபோல கேட்டார். இதைப்போலவே பெரும்பாலானவர்களுக்கு அது என்ன என்றேதெரியாதவர்களாக இருந்தார்கள். ஒரு சிலரே "ஒம் எங்களுக்குக தெரியும்".என்று கூறியிருந்தனர். என்னவே நல்லகாலம் இதை அந்த இஸ்ரேலிய அமைச்சர் பார்க்கவில்லை பார்த்திருந்தால் அவர் அங்கேயே மண்டையை போட்டிருப்பார். இது யேர்மனியின் நிலைமட்டுமல்ல. நான் சிலகாலங்களுக்கு முன் கண்னுற்றேன் என் தாய்திருநாட்டில்கூட இதே நிலைதான். கல்லறைகளுக்குபின் காதல்ஜோடிகள். அதுசரி அவர்களும் அமைதியாக காதல் செய்ய அங்கு இடமில்லைதான். அதற்காக புனிதசின்னங்களா இடம். இனியாவது நல்ல தலைவர்கள் வந்து காதலர்களுக்கும் காதலிக்க நல்ல இடம் கட்டிக்கொடுக்கவேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறேன். :-))

7 மறுமொழி:

சமாதான நோபெல் பரிசு பெற்ற ஜெர்மானிய கேன்ஸ்லர் வில்லி ப்ராண்ட் அவர்கள் போலந்தின் தலை நகரம் வார்சாவுக்கு சென்ற போது அங்கிருந்தப் பழைய யூதக் குடியிருப்பாம் கெட்டோவில் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். முதலில் தலை குனிந்து மௌனமாக நின்றவர் திடீரென்று கீழே மண்டியிட்டார். அவருடையப் பாதுகாப்பு படையினர் எல்லோரும் அவசர அவசரமாக் அவ்வறே செய்தனர். அவரது இந்தச் செயல் உலகெங்கும் இந்த நிகழ்ச்சியைத் தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருந்த லட்சக்கணக்கான யூதர்களின் உள்ளத்தைக் கொளை கொண்டது. ஹூம் அவ்வாறு பிறர் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்தவர்கள் இருந்தது ஒரு காலம்.

இதில் என்ன வினோதம் என்றால் பிராண்ட் அவர்களே நாஜி ஆட்சியின் போது நார்வேயில் சரணார்த்தியாக இருந்தவர். அவருக்கும் யூதக் கொலைகளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்பதே உண்மை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைதான் அது அந்தக்காலம்............... இன்றைய நிலை இதுதான்.

உண்மைதான் அது அந்தக்காலம்............... இன்றைய நிலை இதுதான்.

எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன பெர்லினை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, ஜெர்மனியை யெர்மெனி என்று எழுதியிருக்கிறீர்கள்? (நெஜம்மாவே எழுந்த சந்தேகம் என்பதால் யாரும் இதற்கு வேறு எதுவும் கண்ணோட்டத்தோடு பார்த்து பின்னூட்டமிட வேண்டாம்!)

உண்மைதான் பார்த்தீர்களா எனக்கு ஜெர்மனியைக் கூட சரியாக எழுதத்தெரியவில்லை. இதற்குள் Berlinனை தமிழில் எழுதினால்(?) தமிழ் பாவம்தானே அதற்காகதான் அதை ஆங்கிலத்திலே எழுதிவிட்டேன். சரியா :-))

வருத்தப் படக்கூடிய சுவாரஸ்யமான செய்தி.

உண்மைதான்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users