ஊர் வசை

2009/12/21

கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டும் இங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை


நெற்றியிலே பொட்டைக் காணோம்
பக்கத்திலே கணவனைக் காணோம்
காலிலே முள்ளுக் குத்தக்
காப்பதற்கும் செருப்பைக் காணோம்
                                                    (கையிலே)


கண்ணைச் சுற்றி கண்ணீர் உண்டு
உடலை ஒட்டி நோயும் உண்டு
எண்ணம் எல்லாம் பயமும் உண்டு
ஆறுதற்கு - இது காலமும் அன்று
                                                 (கையிலே)


தொடர்ந்த பாவம் நெற்றிவரை
கட்டிய பாவம் கழுத்து வரை
தொட்ட பாவம் வயிறு வரை
விட்டதா பாவம் இன்று வரை
                                     (கையிலே)


கன்னிப் பருவத்திற் கற்சிலையாள்
கற்றாள் நற்பாடம் பொற்சிலையாய்
காதற் கனியொன்று கைப்பிடித்தாள்
தொடர்ந்தாள் நெற்றியில் பொட்டுமிட்டான்
                                                                (கையிலே)


உற்றார் உறவினர் ஊர்வலமாம்
ஊரார் வலம் வரக் கச்சேரியாம்
கற்றார் நல்லதோர் நாள் சொல்ல
காலைப் பனியிலே கல்யாணமாம்
                                                (கையிலே)


பெற்றாள் அவள் பெண் இயந்திரமாம்
கற்றாள் பாடம் கடைசியிலே 
கணவன் பெற்றான் புதிய களியொன்று
கை விட்டான் சலித்தது இவளென்று
                                                      (கையிலே)


உற்றார் மற்றார் சூழ்ந்து வந்து
சுட்டார் வசையால் - செயலிழந்து
செத்தால் உலகம் இனிக்கு மென
இதுதான் முதலும் முடிவுமென
நடந்தாள் - அவனிடம்


கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டு மிங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை-பகீரதன்-

14 மறுமொழி:

மிகவும் நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

//தொடர்ந்த பாவம் நெற்றிவரை
கட்டிய பாவம் கழுத்து வரை
தொட்ட பாவம் வயிறு வரை
விட்டதா பாவம் இன்று வரை//

நல்ல கவிதை பாடல்...
கண்முன் வந்து போகிறார் கண்ணதாசன்..

வாழ்த்துக்கள்...

நல்ல பாடல்

rajeepan said... [Reply]

சூப்பரா இருக்கு கவிதைபாடல்...ரூம் போட்டு ஜோசிச்சு எழுதினிங்களோ?...

நன்றி கமலேஸ்

நன்றி சிவாஜிசங்கர்.

வருகைக்கும்,தருகைக்கும்
நன்றி அண்ணாமயையாரே

நன்றி திகழ்

நன்றி ரஜீபா...

Anonymous said... [Reply]

பெண்மையின் வலிகளை சொல்லும் அற்புதமான வரிகள் கொண்ட பாடல். பகீரதன் உங்களை போன்ற ஆண்களிடம் இருந்து இப்படியான வரவுகள் நன்று.

கார்த்திகா

@Anonymous

NANRI KARTHIGA

நல்ல இருக்கு
thanks
mrknaughty

Kavi Mani said... [Reply]

it's very nice

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users