மரணக் "குறி"

2006/07/14மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . )
மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த
மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! )
நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும்
ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும்
தன்வசம் இழுத்துப்போகையிலேமரணம் ஓர் வினா ( ? )
நோயினால் துன்புறும் மனிதர் தமை
உலகிற்கு அதிபாரமாய் இருக்கும் கயவர்தமை
பூமியிலே விட்டுவைக்கயிலேமரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்மொத்தத்தில் மரணம் ஓர் புதிர்
தவழ்ந்த குழந்தை முதல் தள்ளாடும்
தாத்தா வரை தன்வசம் அணைப்பதால்
மரணம் ஒரு புரியா புதிர்.

15 மறுமொழி:

கவிதை வித்தியாசம நல்லா இருக்குங்க
வாழ்த்துக்களுடன்...

கவிதை வித்தியாசம, நல்லா இருக்குங்க
வாழ்த்துக்களுடன்

அடடா மிக்க நன்றி சுதேசன். என்னங்க நீங்க தமிழ் இப்பிடி கதைக்கிறீங்க.. ஏனுங்கோ?

ரசிக்கும் படியான ஒரு கவிதை.

ரசிக்கத்தகுந்த கவிதைக்கு நன்றிகள் தர்சன்

thanks Kumar

//*//மரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்//*//

ரசிக்கவைத்த வார்த்தை தர்சன். நல்லாருக்கு கண்ணு.

நன்றி தங்களின் வருகைக்கு கானா பிரபா. தங்களுடைய அடுத்த பதிவு என்னவோ?

"மரணக்குறி" கவிதை நன்றாக இருக்கிறது தர்ஸன். இது தேன்கூடு போட்டிக்காக எழுதப்பட்டதா? கவலைவேண்டாம் முதலிடம் கிடைக்காவிட்டாலும் கடைசிக்கு முதலிடம் கிடைக்கும். :)

நன்றி ஞான்ஸ் தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும்.

ரொம்ப அருமையான கவிதை......

//கவலைவேண்டாம் முதலிடம் கிடைக்காவிட்டாலும் கடைசிக்கு முதலிடம் கிடைக்கும். :) //


MANNAIOOSI நீங்கள் கூறியதும் பார்க்க பருவாயில்லை எனக்கு விழுந்த ஓட்டுக்கள். :-))

நன்றி சுடர்விழி

srikanth said... [Reply]

realy superb amazing kavithai

மிக்க நன்றி சிறீகாந்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users