அழகு ஆறு

2007/05/01

"னக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம் பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி இந்த அழகான பதிவை எழுதலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

எனக்கு பிடித்தில் எல்லாம் ஒரு அழகு இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அப்படி எனக்கு பிடித்த தருணங்கள் வெறும் ஆறுதானா? இதோ:

1. அன்பாய் அந்திப்பொழுதில் பூங்காவில் கெந்தல் நடை புரியும் இளம்/கிழம் ஜோடிகள்.

அப்பப்போ நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்காவுக்குள் என் கண்களுடனும் என் மூன்றாவது கண் கமராவுடனும் நுழைவது வழக்கம். அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு. அப்போது அங்கே நடை பயிலும் இளம்,கிழம் ஜோடிகளும் அவர்கள் அன்பும் கண்டு வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }

2 மாலைப்பொழுதில் ஜெர்மன் நீண்டவழி பாதையுடாக என் துவிச்சக்கர வண்டியில் நன்பர்களுடன் போட்டிபோடும் போதும், அரட்டை அடிக்கும் போதும்.

ஓவ்வொரு சனி பின்பகல் முதல் எந்த காரியமும் எனக்கு ஓடாது. நன்பர்களுடன் நாளை அடிக்க இருக்கும் அரட்டை பற்றிய சிந்தனையே. ஞாயிறு அவர்களுடன் செல்லும் அந்த அடர்ந்த(?) காட்டு நெடுவழி முதல் என் ஓட்டை துவிச்சக்கரவண்டிமுதல் அழகாய்தான் தெரியும். {சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை :-)) } நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )

3. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே

நான் ஒரு சிறந்த ரசிகன்.{அப்படி நினைக்கிறேன்} அதனால்தான் அழகை ரசிக்கிறேன். அதேபோல் அழகான கதை , நடிப்பு , இசை கொண்ட திரைக்காவியங்களும் எனக்கு திகட்டுவதில்லை. தமிழ்,ஆங்கில சினிமா முதல் ஈரானிய திரைப்படங்கள் என என் ரசனை உலக அழவில் விரிந்திருக்கும். ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள் எல்லோருடைய விசிறி நான்.

4.இசையே என் காதலி

இசையின் இனிமை யாருக்குத்தான் கசக்கும் .திரைப்படங்கள் போலவே பல்வேறு தரப்பட்ட இசையை ரசிக்க பிடிக்கும். தமிழ் இசைமட்டுமல்ல ஆங்கில இசைகள் கூட என்னை கவர்தன என்றால் அதுவும் எனக்கு அழகாகத்தான் தெரிந்தன. எனது தெரிவுப் பாடல் குறுவட்டை கேட்பவர்கள் தங்கள் தலையை பித்துகொள்வது திண்ணம். அவர்களுக்கு திண்டாட்டம். கட்டாயம் நான் தூங்கம்போது செவ்விந்தியன்களில் விதவிதமான புல்லாங்குழல் ஓசை கேட்க வேண்டும். (இதுவும் என் விசர்குணம்தான்) அது இல்லாவிடில் வேறு மென்மையான இசை. இப்படியான தருணங்களில் நம்ம இளையராஜா எனக்கு உதவுவார். காலை முதல் மாலை வரை இசையுடன் கழிப்பதால் அதுவும் அழகாகவே எனக்கு தென்படுகிறது.

5.தமிழ்

நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு. நான் ஓர் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்னை பெருமைப்பட வைத்ததில் முதலிடம் எனது மொழியே. இலக்கணம் , இலக்கியம் , முத்தமிழ் , தமிழ் வார்த்தை பிரையோகம், எதுகை மோனை , அடுக்குமொழி ,அடைமொழி ம்... சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் அடிமை நான். நான் அறிந்த ஏனைய சில மொழிகளில் சொல் கொஞ்சமும் பாவனை அதிகமாகவும் இருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் நான் கண்டு வியந்த மொழி. எனக்கு தமிழ் அறிவு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் மற்றவர் கவி,கட்டுரை,விமர்சனம் பார்த்து கற்றதும் ரசித்ததும் ஏராளம்.

6.எங்கள் குடும்பம்

பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.சரி எல்லாம் முடிந்தது நம்ம பங்குக்கு மூன்று பேரை அழைக்க வேண்டும். அவர்கள்


சுதேசன்
லோகா
கோபு

26 மறுமொழி:

delphine said... [Reply]

எங்கள் குடும்பம்///
thats the
real beauty ....

உங்கள் ஆறு அழகும் அழகோ அழகு. அதுவும் உங்கள் குடும்பத்தின் அழகோ அழகு.

யூ.பி
நல்லாயிருக்கு

//thats the
real beauty ....//

நன்றி delphine. நன்றி வருகைக்கும்

//உங்கள் ஆறு அழகும் அழகோ அழகு. அதுவும் உங்கள் குடும்பத்தின் அழகோ அழகு. //

நன்றி வருகைக்கும் , தருகைக்கும்

சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை

+++++++++++++++++++++++++++++++

வாடா வா நாங்க சொல்ல வேண்டிய நீ சொல்லிறியா? எல்லாம் நேரம். கோபுவ வேனுமெண்டா சொல்லிக்கோ. ஓகே.

Ramanan S said... [Reply]

அழகா இருக்கு உங்க ஆறும்.

நான் வந்துவிட்டேன்.ஆனா சற்று தாமதமாக வந்துவிட்டேன்.மனிக்கவும் தோழரே.முழுசாக படித்துவிட்டு வருகின்றேன்

//உனக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி//

நானா?அன்பாக சொன்னேனா?எப்பொழுது?ஹிஹி.

//மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம் பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது//

அந்த கெட்ட பழக்கம் எனக்கு இப்பொழுது இல்லை.எனக்கு தூங்க மட்டும்தான் நேரம் இருக்கு தர்ஷன்.ஆகவேதான் அடிக்கடி மத்தவங்க பக்கம் போக முடியவில்லை

//வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }//

கிடைச்சதுக்கு அப்புறம் நொந்து போகமால் இருந்தால் சரி =)
உண்மையில் உங்களுக்கு ஜோடிகள் தான் கண்ணில் தெரிந்தார்களா?நன்றாக பாருங்கள்.யாரவது ஒரு பெண் தனியாக இருக்கலாம்.அப்புறம் நான் உங்கள் காதல் காவியத்தை கேட்டு ஓடி வர வேண்டி இருக்கும்.

//நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )//

என்னை விட நீங்கள் அரட்டையில் சிறந்தவரா?ஒரு போட்டி வைத்து பார்த்து விடுவோமா?


//. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே//

அழகை இரசிக்க தெரிந்தவர் நீங்கள் என்று தெரிகின்றது :-)

//4.இசையே என் காதலி//

சீக்கிரம் உண்மை காதலி கிடைப்பார்.ஹிஹி.எனக்கு கணினிதான் காதலன் கணவன் எல்லாம் =)


//நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு//

தமிழும் அழகு,நீங்கள் பேசும் எழுதும் தமிழும் அழகுதான் தர்ஷன்.

//.எங்கள் குடும்பம்

பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.//

கொடுத்த வைத்த மனிதர்.நானும் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.ஏனென்றால் எனக்கும் உங்களைப் போலவே அழகான அன்பான குடும்பம்.


மொத்ததில் நீங்களும் அழகான மனிதர் என்று தெரிகின்றது.வெளி அழகை சொல்லவில்லை தர்ஷன்(ஏனென்றால் நான் உங்களை பார்த்தது இல்லை).

எனக்காக எழுதியதுக்கு நன்றி தர்ஷன்.

//யூ.பி
நல்லாயிருக்கு//

நன்றி

வீட்டுக்காரர் ப்ளாக் பார்க்கிறவையோ இப்பிடி ஐஸ் வைக்கிறிங்கிள்:-)))

அழகு ஆறும் நல்லாயிருக்கு.

\\வாடா வா நாங்க சொல்ல வேண்டிய நீ சொல்லிறியா? எல்லாம் நேரம்\\

:-))

//வாடா வா நாங்க சொல்ல வேண்டிய நீ சொல்லிறியா?//

சரி சரி விடு. :-(( {தம்பி ஏதாவது பிரச்சனை என்றாலும் இப்பிடி பொதுவான இடத்தில மறுமொழி எழுதிவிட்டு, நீ பொரிய யோக்கியன் என்றால் என்னுடைய மறுமொழியை போடுபாப்பம் என்று சொல்வது நல்லாயில்லை.}

//எல்லாம் நேரம்.//

இல்லை எல்லாம் என்னுடைய நேரம்.

//கோபுவ வேனுமெண்டா சொல்லிக்கோ. ஓகே.//

வேணாம் கோபு அழுதிடும் விட்டுடு :-))

//அழகா இருக்கு உங்க ஆறும்.//

நன்றி ரமணன்

நன்றி தங்களுடைய வருகைக்கு தூர்கா

//கிடைச்சதுக்கு அப்புறம் நொந்து போகமால் இருந்தால் சரி//

இப்பிடி பயப்பிடுத்திரிங்களே!

//என்னை விட நீங்கள் அரட்டையில் சிறந்தவரா?ஒரு போட்டி வைத்து பார்த்து விடுவோமா?//

நான் அரட்டை அவ்வளவாக அடிக்கமாட்டேன். ஆர்வமாக கேட்பேன். சும்மா எல்லாம் பொழுதுபோக்குத்தான்.

//எனக்கு கணினிதான் காதலன் கணவன் எல்லாம்//

தெரியும்

//தமிழும் அழகு,நீங்கள் பேசும் எழுதும் தமிழும் அழகுதான் தர்ஷன்.//

வேண்டாம். நன்றாக தமிழ்தெரிந்தவர்கள் அழப்போகிறார்கள். நானே தமிழில் பலபேரிடம் உதவி பெற்றுத்தான் பதிவு எழுதுகிறேன்.

//எனக்காக எழுதியதுக்கு நன்றி தர்ஷன்//

எழுத சந்தர்ப்பம் வழங்கிய தங்களுக்கும் மிக்க நன்றி.

//வீட்டுக்காரர் ப்ளாக் பார்க்கிறவையோ இப்பிடி ஐஸ் வைக்கிறிங்கிள்:-)))
//

இல்லை சினேகிதி. அவே பார்த்தால் ஆனந்தகண்ணீரும் ரத்தக்கண்ணீரும் சேர்ந்து விடுவார்கள். :-))

மற்றப்படி மிதுஸ் சொல்லிரது ரொம்ப ஓவர். நாம எல்லாரும் அஜீத்,மாதவன் மாதிரி இல்லாட்டியும் தர்சன் கோபு மாதிரி இருப்பம். :-))

sadi said... [Reply]

//ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும்.//

இதில தர்சன் நீர் யாரையோ ஒரு பெரிய நடிகரை குத்திக்காட்டுவது போல இருக்கு. எண்டாலும் நீர் செல்வது உண்மை.

//கோபுவ வேனுமெண்டா சொல்லிக்கோ. ஓகே//

தம்பி நம்மடஅழகிலயும் மயங்கிய ஆட்கள் இருக்கு தெரியும்தானே.

//இதில தர்சன் நீர் யாரையோ ஒரு பெரிய நடிகரை குத்திக்காட்டுவது போல இருக்கு. எண்டாலும் நீர் செல்வது உண்மை.//

அப்படியா யாரது? :-))

//தம்பி நம்மடஅழகிலயும் மயங்கிய ஆட்கள் இருக்கு தெரியும்தானே//

ஓஓஓஓஓஓஓஓவ்..........

உங்கள் குடும்பத்தில் அழகை கண்ட உங்கள் மனதை தான் நான் அழகு என்பேன்..

வருகைக்கு நன்றி தூயா.

Rajeepan said... [Reply]

((அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு))
very nice humor in your writings.. allthe best

THX rajeepan

rajeepan said... [Reply]

ஓஓஓ........... தர்சன்.. என்னடா துர்க்கா உன்னைப்பற்றி ஓவராக தூக்கி போசுறாங்க என்னப்பா விசயம்?...

//அழகை இரசிக்க தெரிந்தவர் நீங்கள் //
//சீக்கிரம் உண்மை காதலி கிடைப்பார்//
//நீங்கள் பேசும் எழுதும் தமிழும் அழகுதான் தர்ஷன்//
//மொத்ததில் நீங்களும் அழகான மனிதர் என்று தெரிகின்றது//


அட்ராசக்க..ம்ம்ம்........நடக்கட்டும் நடக்கட்டும்..

அப்பா சாமி... எதிரிகள் வேற எங்கையும் இல்லை.. பக்கத்திலேயேதான் இருக்கிறிங்கள்.

இங்கையாவது அடக்கி வாசிங்கடாப்பா :-((

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

நன்றி tamil paiyan வருகைக்கும்,ஆலோசனைக்கும்.

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users