யாரில் தவறு?

2005/11/03

அண்மையில் கிடைத்தவிடுமுறையில் ஸ்டுட்காட்டில் உள்ள எங்களின் சித்தியின் வீட்டிற்குசென்றோம்.எங்கள் சித்திக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பயங்கர சுட்டி!.நாங்கள் அங்கே போன மறுநாள் அம்மாவும்,நானும் கடைகளுக்கு போகவேண்டியிருந்ததால் நாங்கள் போகத்தயாராகிக்கொண்டிருந்தோம்.அன்று வேலையில்லாததால் சித்தப்பா வீட்டிலேயே நிற்பதால் சுட்டி(அவனின் பெயரை இப்படியே எழுதுகிறேன்.) பாடசாலையால் வந்தால் சித்தப்பாவோடு நிற்பான் என்ற தைரியத்தில் சித்தியும் எங்களுடன் கடைக்கு சேர்ந்தே வந்தார்.


நாங்கள் மதியம் இரண்டு மணிக்கு வீடுதிரும்பியபோது வீட்டிலிருந்த சில கண்ணாடிப்பொருட்கள் உடைபட்டிருந்தன. சித்தப்பா அவற்றை கூட்டி அள்ளிக்கொண்டிருந்தார். சுட்டி இரண்டு கையிலும் வேவ்வேறு ஜஸ்கிறீமை வைத்து அழுது அழுது குடித்துக்கொண்டிருந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சித்தி"என்னப்பா நடந்தது?" என்று வினாவ. சித்தப்பாவின் குரலில் ஆத்திரம் தென்பட்டது."இந்த குரங்கு எல்லாத்தையும் உடைச்சுப்போட்டுது" என்று கோபமாக கூறினார். உடனே நான் நினைத்தேன். அவன் பாடசாலையால் வந்தபின் விளையாடும்போது இந்த கண்ணாடிப்பொருட்களை தட்டி உடைத்துவிட்டானாக்கும். அதற்குதான் சித்தப்பா அவனைப்போட்டு அடித்திருக்கிறார் என்று.


ஆனால் விடயம் அது அல்ல! இங்கே நடந்ததோ வேற! அப்படியென்ன நடந்தது என்ன என்று கேட்கிறீர்களா? சுட்டி பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்போ வீட்டுக்கு வெளியே ஒரு வெள்ளையன். இவனும் அவனைப்பார்த்துக்கொண்டு கதவருகே வந்து நின்றுகொண்டு கதவைத்தட்ட... உள்ளேயிருந்து சித்தப்பா வந்து கதவைத்திறந்திருக்கிறார். அவன்பின்னே ஒரு வெள்ளைக்காரனும் வர சித்தப்பா சற்றுதடுமாறி நிற்க அவனும் அந்தநேரம்பார்த்து காலைவணக்கம்சொல்ல... என்னோடுதான் ஏதோ கதைக்கவாரன் என்று சித்தப்பா மீண்டும் இன்னும் கொஞ்சம் தடுமாற.... அவனும் டொச்சில்கதைக்க அது சித்தப்பாவுக்கு விளங்கவில்லை. மீண்டும் சித்தப்பா பேந்த பேந்த முழிக்க அவனும் ஹலோ நான் கதைப்பது விளங்கிறதா எனகேட்க! ... சித்தப்பா தற்போது தெளிவுடன் உள்ளே வாருங்கள் என அழைத்தார் போலும். அவனும் வந்த வேலையை ஆரம்பித்தான். ஆம் அவன் வீட்டிலிருக்கும் மின்சார தொடுப்பை பரிசோதிக்கவந்தவன்தான்.


சித்தப்பாவுக்கு தற்போது ஒருவித பதற்றம்போய் வேறுவிதமான கவலை சூழ்ந்து கொண்டது.முதலில் வந்தது தயார்படுத்தப்படாமல் எப்படி டொச் கதைப்பது என்பதான பதற்றம்.ஆனால் இப்போது இவன்கேட்கும் கேள்விக்கு எப்படி பதில் சொல்லி சமாளித்து அனுப்பபோகிறேன் என்ற பதற்றம். ஆகையால் அவன் இதை கேட்டால் இப்படி பதில் கூறவேண்டும் என தனக்குள்ளே சில கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளையும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். ஆம் சித்தப்பாவுக்கு அவ்வளவாக டொச் தெரியாது.அவன் இப்போது ஒரு கேள்விகேட்டான். அப்பாடா அதற்கு பதில் சொல்லிவிட்டார்.ஏற்கனவே மனப்பாடம் செய்த கேள்விதான்.


ஆனால் இந்தமுறை முடியவில்லை.காரணம் அது விளங்கவில்லை. மீண்டும் பேந்த பேந்த முழித்துகொண்டு அவன்கேட்கும் கேள்விக்கு போருந்தாத பதிலைசொல்லிக்கொண்டிருந்தார். கேட்டுகேட்டே சலிப்புற்ற அவன் கடைசியாக ஒருக்கா மீண்டும் கேட்டான்.இங்கதான் அந்த மிகப்பெரிய கலவரமே நடந்தது. ஆம் அதுவரை உள்ளே அறையில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலே பார்த்துக்கொண்டிருந்த சுட்டி வெளியேவந்து மேதாவித்தனமாக சொன்னான். "அவருக்கு டொச்தெரியாது நீங்க என்னிடம் கேளுங்க நான் சொல்கிறேன்" என்றதும் வெள்ளையனும் இவனிடமே கேள்விகனைகளை தொடுக்க அதற்கெல்லாம் பதில் சரியாக அழித்து அவனுக்கும் விடைகொடுத்து உள்ளே வந்தவனுக்கு சித்தப்பாவிடம் கிடைத்திருக்கிறது பூஜை. ஓட ஓட அடிபோடும்போது தட்டுப்பட்டு உடைந்தவைதான் அந்த கண்ணாடிப்பொருட்கள்.:-))


இந்த சம்பவத்தை உன்னிப்பாக கவனியுங்கள். இதில் யார் தவறு செய்தவர்? ஜெர்மன் வந்து பல வருடங்களாகியும் டொச் கற்றுக்கொள்ள முயற்சிசெய்யாத சித்தப்பாவிலா? அல்லது சுட்டியிலா? சுட்டி அங்கே அவனிடம் போய் அவருக்கு டொச் தெரியாது என்று சொன்னது தன் மானப்பிரச்சனையாக பார்க்கத்தெரிந்த சித்தப்பாவுக்கு டொச் படிக்காமல் இந்த நாட்டில் வசிக்கும்போதும் சரி ,அவனிடம் பதில்களை மாறிமாறி சொன்னபோதும் சரி அவரின் மானம் கப்பல் ஏறவில்லையா? ஏதாவது கடிதங்கள் வந்தால் அதை எடுத்துக்கொண்டு நன்கு டொச் தெரிந்த நன்பனிடமோ அல்லது மொழிபெயர்பாளரிடமோ ஓடும் இவர்களின் குடும்ப ரகசியங்கள் எப்படி பேணப்படும்? இப்படி என்னற்ற கேள்விகணைகளை அவரிடம் கேட்கலாமா என நினைத்தேன். ஆனாலும் முடியவில்லை. அதற்கு வயதும் ஓர் காரணம். அவரின் விதண்டாவாத பேச்சும் ஒரு காரணம். ஆம் நாங்க வந்த சூழலில் இங்க படிக்க வசதியில்லை.வீட்டில் இருக்கிறவங்களுக்காக உழைக்கவெளிக்கிட்டம் என்பார். :-(


(கொஞ்சம் கற்பனை)


-தர்சன்-

7 மறுமொழி:

அந்த பிள்ளையின் திறமை பாராட்டத்தக்கது. பெரியவர்கள் சாக்குப்போக்கு சொல்லாமல் பாசையைக்கற்க வேண்டும். கல்விகற்பதற்கு என்ன எல்லை. அனேகர் இப்படித்தான் கஸ்ரப்படிறம். :)) என்றாலும் அந்த சுட்டி சரியான சுட்டி தான்.

Anonymous said... [Reply]

நல்ல பதிவு.

கருத்திற்கு நன்றி கயல்விழி மற்றும் anony(mous).

adi vanginathu neenga ilaye tharshan? :)

ithai vasithavudane enaku en sithapa mahan a pathi oru pathiku idea vanthachu.

tx to u :)

ம்... அடி வாங்கியது நான் இல்லை. நான் சிறுவயதில் செய்த குறும்புகள் வேறு விதம். :-)) எங்கே தங்களின் சித்தப்பா மகனின் பதிவு?

Anonymous said... [Reply]

சரியான அப்பா அப்படிதான் அடிபோடவேண்டும். பெற்றோருக்கு தெரியாவிட்டால் அதற்காக பிள்ளை வந்து அவருக்கு ஒண்டும் தெரியாது என்று சொல்லிறதா நல்ல கதையா எல்லா இருக்கு.

//சரியான அப்பா அப்படிதான் அடிபோடவேண்டும். பெற்றோருக்கு தெரியாவிட்டால் அதற்காக பிள்ளை வந்து அவருக்கு ஒண்டும் தெரியாது என்று சொல்லிறதா நல்ல கதையா எல்லா இருக்கு.//

ம்.... இதுவும் சரிபோலத்தான் தெரிகிறது. :-))

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users