வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

2007/03/03


இது வேலையில்லாமல் ஊர்சுற்றும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விடயம்.


ஜெர்மனியை பொருத்தவரை வேலையில்லாத்திண்டாட்டம் பெரும் பிரச்சனை. காரணம் ஜெர்மனியிலிருந்த பல தொழிற்சாலைகள் இடம் பெயருவதுதான். இடம்பெயர அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். சரி அது எல்லாம் நமது சின்ன மூளைக்கு விளங்காத விடயம். இப்ப நான் உங்களுக்கு சொல்ல வந்த விடயமே வேற.


வீட்டுக்குள்ளிருந்து பணம் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று புருவத்தை உயர்த்தி நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ அதற்கான மிகச்சிறந்த , நம்பிக்கையான , ஒரு செலவும் இல்லாத வழி இது. (இதை என்னுடைய தங்கைகளும் கையாளுகிறார்கள்) நீங்களே முதலாளி , நீங்களே தொழிலாளி.


அதாவது நீங்கள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் அறவிடலாம்.பலசரக்கு கடைக்கு அம்மாவுடன் போனால் ஒரு குறிப்பிட்ட காசு, வீட்டை சுத்தம் செய்தால் ஒரு தொகைப்பணம் என்று (அதிகம் கூடாது 0.50சதம் தொடங்கி 5 யூரோ வரை, தங்களுடைய நாட்டு பணத்திற்கு ஏற்ப நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.) ஒரு விலைப்பட்டியல் தயார் செய்து தங்களுடைய வீட்டிலிருக்கும் பணமுதலைகளிடம் கொடுக்கலாம்.(யாரிடம் அதிகம் பணம் புளங்கிறதோ அவர்களே இதற்கு சரியான தெரிவு)
இந்த திட்டத்துக்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வேறு வழி மேற்கொள்ளலாம்.


அது பிளாக்மெயில் (பயமுறுத்துதல்) :-)). அவர்கள் உங்கள் மேல் பொலிஸ் கேஸ் போடாமல் இருக்கும் படியான எத்தனையோ பிளாக்மெயில்கள் இருக்கு. உ+ம் : இவ்வளவு காசு தந்தால் தான் நான் போய் குளிப்பேன் , ..................... , பல பல



இத்தகவல்கள் வீட்டிலிந்து பணம் சம்பாதிக்க உதவும் என நம்புகிறேன்.






{ஹா ஹா இல்லை என் பதிவை அதிகம்பேர் பார்வையிட வைக்க முடியும் என்று என் நன்பனுடன் ஒரு சின்ன பெட். அடுத்த முறை ஏதாவது பிரியோசனமா எழுதுகிறேன்.ஹா ஹா}

15 மறுமொழி:

ok,waiting for the next.
:-))

\\ஹா ஹா இல்லை என் பதிவை அதிகம்பேர் பார்வையிட வைக்க முடியும் என்று என் நன்பனுடன் ஒரு சின்ன பெட். அடுத்த முறை ஏதாவது பிரியோசனமா எழுதுகிறேன்.ஹா ஹா\\


Athuku ipidi oru valliyaa??

nan kutty kutty velai seithidu kaashu vaangina kaalam pochu...ipa thangachida oru sina help kedakooda kaasu kuduka vendi kidaku :-(

//ok,waiting for the next.//

அடடா கட்டாயம் ஏதாவது பயனுள்ளதா எழுதத்தான் தேவையா? ம்... முயற்சி செய்கிறேன்.

Athuku ipidi oru valliyaa??

ஓம் அனேகம் பேர் இதை பார்த்து இருக்கிறார்கள். என்ன எனி எப்படி நல்ல [நம்பிக்கை எனக்கேயில்லை :-))] பதிவுபோட்டாலும் வர மாட்டார்கள்.

nan kutty kutty velai seithidu kaashu vaangina kaalam pochu...ipa thangachida oru sina help kedakooda kaasu kuduka vendi kidaku :-(

வயதுபோனா அப்படித்தான்.:-))(பதில் போடவே பயமா இருக்கு உங்க மறுமொழிக்கு.எத்தனை பேச்சோ!!)

Anonymous said... [Reply]

நீங்கள் ஜெர்மனியில் இருப்பதே நன்று!இதுக்கு எல்லாம் ரூம் போடு யோசிப்பீங்களோ!நானும் என் அண்ணாவிடம் blackmail,email என்று எல்லாம் மெயிலும் பண்ணி பார்த்துவிட்டேன்..எங்கே ஒன்னும் நடக்கவில்லை.அடுத்த பதிவு black mail செய்வது எப்படி என்று போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ;)

//அடுத்த பதிவு black mail செய்வது எப்படி என்று போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ;)//

ம்... ஏதோ ஒரு முடிவிலதான் இருக்கிறிங்க :-))

Anonymous said... [Reply]

ம்.. இது எல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல??
நடத்துங்க நடத்துங்க.. :-)

நேசமுடன்..
-நித்தியா

//ம்.. இது எல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல??
நடத்துங்க நடத்துங்க.. :-)//

இல்லவேயில்லை ஒரு காலத்தியே என் கைச்செலவுக்கு காசு தந்த தொழில். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும் என்ற நல்ல எண்ணம்தான் என்னை இங்கே பதிய வைத்தது.

Unknown said... [Reply]

Aen ippady erukkinga......?

//Aen ippady erukkinga......?//

teriyavilai

Anonymous said... [Reply]

இதுவே சிறந்த வழி. :)

பதிவு இட்டு பல மாதங்கள் கடந்த பின்னும் வந்து சேர்ந்த தங்களுடைய மறுமொழிக்கு முதலில் ஒரு நன்றி. வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க பாதுபாப்பான வழி இதுதான் :-))

இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறேன் உங்ககிட்டே இருந்து!

நன்றி நாமக்கல் சிபி அவர்களே. முயற்ச்சிக்கிறேன்.

Anonymous said... [Reply]

மட்டறுத்தலுக்காக உங்கள் மறுமொழி கிடப்பிலிருக்கிறது.

neengal oru naalaiku rs.250 sambarika kandippa mudiumga nan aarambathil oru naalaiku rs.150 sambarithen ipoluthu nan rs.300 sambarikura maatham evlavunu neengale kanaku panungale athu mattum illanga referal la oru nalaiku rs.50 kidaikuthu neengalum sambarikunuma http://www.nidurwap.weebly.com intha website ponga sariyana valikatuthal kuduthurupanga athan padi neenga online work pannuna sambarikalam oru naalaiku 15nimidam pothumaanathunga

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users