இதனிலும் கேவலமுண்டோ....

2006/06/12



தெற்கிலே "அம்மே" யும் வடக்கிலே "அம்மா"வும்மென
சிறார் கூப்பாடு ஒன்றுதான் ஏனோ..
வடக்கின் கூப்பாடு மட்டும் இவர்கள் காதில்விழ
தெழிவின்மையும், நீண்டகாலமும்....

அவ்வண்ணமே விழுந்தாலும்
போர் கொடுத்த விழைவின் அநாதைகளான இவர்கள்
"செஞ்சோலை" தனிலிருந்தால் சிறார் படை
ஆட்சேர்ப்பு என்ற பொய்யுரைகளாய்..

வடகிழக்கின் சிறார்! படிக்க பள்ளியில்லை,
காக்க காப்பமுமில்லை பொருளாதாரத்
தடையின் எச்சமாகிய எலும்புக்கூட்டங்களாக...

அல்லைப்பிடியிலும், வங்காலையிலும்
தூக்கில் தொங்கவிடவும்,வெட்டிகூறுபோடவும்
இவர்கள் செய்த வினைதான் என்ன?
யாமறிந்த வகையில் ஈழத்தினில் தமிழனாய் தவழ்ந்ததால்

இதனிலும் கேவலம் தொட்டதற்கெல்லாம்
அறிக்கையறிக்கைகளாய் விளாசித்தள்ளும்
சர்வதேச சமூகத்திடம் இந்நேரம் தனில்
"பேப்பரும்,பேனாவும்" இல்லாமல் போனதுதான். :-((

-சுதேசன்-

7 மறுமொழி:

Anonymous said... [Reply]

ஜயோ தர்சன் அந்த காட்சிகள் கொடுமையிலும் கொடுமை. என் கண்முன்னே நிக்கின்றன.

Click

தர்சன்,
எம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் நீதி ஒன்றுதான். நிச்சயம் நீதி வென்றே தீரும். எம்மினத்தின் இன்னல்கள் தொலையும் நாள் வரும்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

Anonymous said... [Reply]

வன்னி புலி சிங்களவரை கொண்டால் அது கொலையில்லையா?

ஆம் குமரன் அந்தபடங்களை நான் பார்த்தேன். அன்று முழுதும் அதே கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

வெற்றி அந்த நாள் வந்தேயாக வேண்டும். வெகுவிரைவில்... எத்தனை உயிர்களை என்னும் விலைகொடுப்பது இப்படி. :-((

//வன்னி புலி சிங்களவரை கொண்டால் அது கொலையில்லையா?//

ஓர் உயிரை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அது யாராய் இருந்தால் என்ன.

என்மனதில் ஒரு கேள்வி அப்பப்போது சிலபல செய்திகளை காணும்போது மனதில் தோன்றுவதுண்டு அது என்ன வன்னி புலி? புலி வேறு ஒரு இடத்திலும் இல்லையா? :-)) {சும்மா}

Anonymous said... [Reply]

கவலையான கவி தர்சன்.

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users